Fire Boltt Ninja call Pro ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!
புளூடூத் அழைப்பு அம்சத்துடன் கூடிய Fireboltt Ninja Call Pro Plus ஆனது இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் பிரிவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட். இது பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஃபயர்போல்ட் தனது Ninja Call Pro Plus ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச் 1.83 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் புளூடூத் இணைப்பைக் கொண்டுள்ளது. இந்த Ninja Pro Plus 100 விதமான விளையாட்டு முறைகள் மற்றும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இது AI குரல் உதவி, ஸ்மார்ட் அறிவிப்பு, இதய துடிப்பு, SPO2 போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 நாட்கள் வரை நீடிக்கும். பயன்பாட்டில் இல்லாத போது பேட்டரி 15 நாட்கள் வரை நீடிக்கும்.
விலை விவரங்கள்
ஃபயர் போல்ட் நிஞ்ஜா கால் ப்ரோ பிளஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசானில் ரூ.1,999 விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு, கருப்பு தங்கம், சாம்பல், பிங்க் மற்றும் நேவி ப்ளூ ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
விவரங்கள்
இந்த ஸ்மார்ட் வாட்ச் 1.83 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 240x284 பிக்சல்கள் ரெசல்யூஷன், புளூடூத் காலிங் வசதி மூலம் அடுத்தவரை அழைக்கவும் பேசவும் முடியும், மேலும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.
மற்ற வசதிகள்
இதில் 100 ஸ்போர்ட்ஸ் மோட், ஹெல்த் டிராக்கர், ட்ரிங் வாட்டர் அலர்ட், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் மானிட்டர், ஸ்பிஓ2 போன்றவை உள்ளன. மேலும் கேமரா கட்டுப்பாடு, இசைக் கட்டுப்பாடு, வானிலை புதுப்பிப்பு, வாட்டர் ரெசிஸ்டண்ட், டஸ்ட் ரெசிஸ்டண்ட் இன்பில்ட் கேம்கள் போன்ற ஸ்மார்ட் அறிவிப்பு அம்சங்களும் உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Google செய்திகளில் 'tamilkey' இணையதளத்தைப் பின்தொடரவும்